தினமலர் அலுவலகம் மீது விடுதலைச் சிறுத்தைகள் தாக்குதல்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறி அக்கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் இன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தினமலர் அலுவலகத்தை தாக்கினர்.
சென்னை, அண்ணாசாலையில் உள்ள தினமலர் அலுவலகத்தில் இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பாட்டில்கள், கட்டைகளுடன் வந்து தினமலர்
அலுவலகத்தின் 2 காவலாளிகளை கண்மூடித்தனமாக தாக்கினர்.
பின்னர் நுழைவு வாயிலில் இருந்த ஊழியர்கள் வரவை பதிவு செய்யும் மெஷினை அடித்து நொறுக்கினர். ஆனால் அவர்கள் அலுவலகத்திற்குள் நுழையும் முன்னர் அங்கிருந்த மற்றொரு கேட் மூடப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தையினர் கண்களில் பட்டதையெல்லாம் அடித்து சின்னா பின்னமாக்கினர்.
தொடர்ந்து 10 நிமிடம் அந்த தாக்குதலில் அந்த இடமே பெரும் கலவரம் நடந்த இடம் போல் காட்சியளித்தது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த காவலாளிகள் இருவரும் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அண்ணாசாலை போலீசார் 2 விடுதலை சிறுத்தையினரை பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த தாக்குதல் குறித்து தினமலர் நிர்வாகம் சார்பில் அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலால் அண்ணா சாலையில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications