எவரெஸ்ட்டை 'வென்ற' எட்மண்ட் ஹில்லாரி மரணம்

Subscribe to Oneindia Tamil

Edmund Hillary with Tenzing Norgay
வெல்லிங்டன்: எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலாக ஏறி சாதனை படைத்த நியூசிலாந்தின் எட்மண்ட் ஹில்லாரி மரணமடைந்தார்.

20வது நூற்றாண்டின் மிகப் பெரிய சாதனையாக வர்ணிக்கப்படுவது எவரெஸ்ட் சிகரத்தில் ஹில்லாரியும், நேபாளத்தின் டென்சிங்கும் ஏறிய சாதனை நிகழ்வு.

1953ம் ஆண்டு மே 29ம் தேதி எட்மண்ட் ஹில்லாரியும், நேபாளத்திந் டென்சிங் நார்கேயும் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்டு உலகத்தின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்த்தனர்.

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்டின் உச்சியில் இருவரும் இருந்த நேரம் கால் மணி நேரம்தான். ஆனால் இன்றளவும் அவர்கள் நிகழ்த்திய சாதனை உலக வரலாற்றில் அழியாப் புகழுடன் உள்ளது.

எவரெஸ்ட் மட்டுமல்லாமல், ஆல்ப்ஸ் மலைத் தொடர், நியூசிலாந்தில் உள்ள மலைகள் உள்ளிட்டவற்றை தனது கால்களால் அளந்தவர் ஹில்லாரி.

இப்படி மலையேற்றத்தில் பல சாதனைகள் படைத்த ஹில்லாரி ஆக்லாந்தில் வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 88. ஹில்லாரியின் மரணச் செய்தியை நியூசிலாந்தி பிரதமர் ஹெலன் கிளார்க் அறிவித்தார்.

கடந்த சில ஆண்டுளாகவே ஹில்லாரி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்ததார்.

அரசு மரியாதையுடன் அவரது இறுதி சடங்குகள் நடத்தப்படும் என ஹெலன் கிளார்க் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+