கோவா: 3 அமைச்சர்கள் ராஜினாமா- காங். கூட்டணி அரசு கவிழ்கிறது?!
பனாஜி: கோவாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் வாபஸ் பெற்றுள்ளது.
40 உறுப்பினர் கொண்ட கோவா சட்டசபையில் முதல்வர் திகாம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 16 எம்எல்ஏக்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்எல்ஏக்களும், சிறிய கட்சிகளைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்களும், 2 சுயேச்சைகளும் என மொத்தம் 23 பேர் உள்ளனர்.
எதிர்க்கட்சி கூட்டணியில் பாஜகவுக்கு 14 எம்எல்ஏக்களும், அக் கட்சியை ஆதரிக்கும் 2 சிறிய கட்சிகளின் எம்எல்ஏக்களும் உள்ளனர்.
ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. வெளியில் இருந்து காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தந்து வந்தார்.
இதில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்று அமைச்சர்களாக உள்ள தேசியவாத காங்கிரசின் 3 எம்எல்ஏக்களும் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். சுயேச்சை எம்எல்ஏவும் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளார்.
இதனால் அரசு ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறக் கூடாது என தனது கட்சியின் எம்எல்ஏக்களுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அவரது எச்சரிக்கையை அந்த 3 எம்எல்ஏக்களும் மதிப்பார்களா என்று தெரியவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications