ரேடியோ-டிவி சேவையை துவங்கும் அலிகர் பல்கலை
Subscribe to Oneindia Tamil
அலிகர்: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் விரைவில் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி,ஒளிபரப்புகளை துவக்க இருப்பதாக அதன் துணைவேந்தர் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
பல்கலையின் இதழியல் மற்றும் தகவல் தொடர்புத்துறைக்காக பத்து மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று ஸ்டுடியோக்களை திறந்து வைத்துப் பேசிய அவர், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்புகள் துவங்க இருப்பதாக தெரிவித்தார்.
அலிகர் பல்கலையில் சுமார் 28,000 மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும், அவர்கள் 70 விடுதிகளில் தங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் 1,400 பேராசிரியர்களும், 6,000 அலுவலக ஊழியர்களும் பணிபுரிந்து வருகிறன்றனர். வருடந்தோறும் சுமார் 500 வெளிநாட்டு மாணவர்கள் இங்கு கல்வி பயில வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications