டாடாவுக்காக நிலம் கையகப்படுத்தியது செல்லும்!
கொல்கத்தா: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ரூ. 1லட்சம் மதிப்பிலான டாடா நானோ கார் தயாரிப்புக்காக, மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நிலம் கையகப்படுத்தியது செல்லும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டாடா நிறுவனத்தின் கனவுத் திட்டமான சிறிய ரக காரான டாடா நானோ சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரின் தயாரிப்பை மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் மேற்கொள்ள டாடா நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக மேற்கு வங்க அரசு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்குத் தேவையான 1000 ஏக்கர் நிலத்தை கடந்த ஆண்டு கையகப்படுத்தியது.
இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று அறிவிக்கக் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள், மனித உரிமை ஆர்வலர்கள், வக்கீல்கள் உள்ளிட்டோர் 11 வழக்குகளைத் தொடர்ந்தனர்.
இந்த வழக்க விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.எஸ். நிஜ்ஜார், நீதிபதி பி.கே.கோஷ் அடங்கிய உயர்நீதிமன்ற பெஞ்ச், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.
இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா நானோ கார் தயாரிப்புக்கு இருந்து வந்த பெரிய சிக்கல் தீர்ந்துள்ளது.
ரூ. 1லட்சம் மதிப்பிலான நானோ கார் வருகிற செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. சிங்கூர் தவிர மேலும் 3 இடங்களில் இதன் உற்பத்தியை மேற்கொள்ள டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications