மன்மோகன் சிங், ரஜினி, ரஹ்மானுக்கு என்டிடிவி விருது
என்டிடிவி சார்பில் 2007ம் ஆண்டில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களைத் தேர்வு செய்ய நேயர்களிடையே ஓட்டெடுப்பு நடத்தியது. கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் நேயர்கள் இதில் கலந்து கொண்டு, தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களித்து வந்தனர்.
இதன் முடிவுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. அதன்படி 2007ம் ஆண்டின் சிறந்த தலைவராக பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு என்டிடிவியின் தலைவர் பிரனாய் ராய் விருதை வழங்கினார்.
விருதினைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், நான் தற்செயலாக அரசியலுக்கு வந்தவன். இருந்தாலும், எனது அரசியல் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் நன்கு அனுபவித்து வருகிறேன்.
அரசியல் அதிகாரம் என்பது சமூகம் நமக்குக் கொடுத்துள்ள உரிமை, நம்பிக்கை. அதை வைத்துக் கொண்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். 1991 முதல்தான் நான் அரசியலில் இருந்து வருகிறேன். இந்த காலகட்டத்தில் நான் பல அனுபவங்களை சந்தித்துள்ளேன்.
எனது அரசியல் வாழ்க்கையில் எந்தவித ஏமாற்றமும் இல்லை. எந்தப் பணியாக இருந்தாலும் அதை திறம்பட செய்ய, சந்திக்க எனக்கு தைரியம் கொடு என்று நான் இறைவனிடம் வேண்டிக் கொள்வது வழக்கம்.
லோக்சபாவுக்கு இடைத் தேர்தல் வராது என்றே நினைக்கிறேன். 2009ல் தேர்தல் நடத்துவதே சரியானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றார் மன்மோகன் சிங்.
சிறந்த தலைவர்களுக்கான பிரிவில் அப்துல் கலாம், ஷாருக் கான், அத்வானி, மாயாவதி, விப்ரோ தலைவர் ஆசிம் பிரேம்ஜி, முகேஷ் அம்பானி, சானியா மிர்ஸா, எம்.எஸ்.தோணி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் இந்த விருதினை டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் பெற்றுள்ளனர்.
சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற சர்வதேச சூழ்நிலை மாற்ற அமைப்பான ஐபிசிசியின் தலைவரான டாக்டர் ஆர்.கே.பச்சோரிக்கு, குளோபல் இந்தியன் ஆப் தி இயர் விருது கிடைத்தது.
கவனிக்கப்படாத நாயகர்கள் பிரிவில் வழங்கப்படும் விருது, இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தியன் ஆப் தி இயர் விருதும் ராணுவ வீரர்களுக்கே கிடைத்தது.
சிறந்த பொழுதுபோக்காளர் ரஜினிகாந்த்:
2007ம் ஆண்டின் சிறந்த பொழுதுபோக்காளர் விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்குக் கிடைத்தது. ரஜினிகாந்த் நேரில் விருதினைப் பெற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் விருதை வழங்கினார்.
அப்போது ரஜினி பேசுகையில், நான் அரசியலுக்கு வருவதும் வராததும் கடவுளின் கையில் தான் உள்ளது. எனக்குப் பிடித்த நடிகர் அமிதாப்பச்சன் என்றார்.
சிறந்த இசைக்கான விருதினை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார்.
2007ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருது விஸ்வநாதன் ஆனந்த்துக்குக் கிடைத்தது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு 2007ம் ஆண்டின் சிறந்த பிசினஸ்மேன் விருது கிடைத்தது.
என்டிடிவி சிறப்பு விருது கால்பந்து ஸ்டார் பைசுங் பூதியாவுக்குக் கிடைத்தது.
என்டிடிவி சிறப்பு பிசினஸ் விருது கே.பி.சிங்குக்கு கிடைத்தது.
டெல்லியில் நடந்த வண்ணமிகு விழாவில் விருது பெற்றோர் அவற்றை பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் நிதியமைச்சர் ப.சிதம்பரம், லதா ரஜினிகாந்த், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!













Click it and Unblock the Notifications