விஜய்காந்துக்கு தலைக்கேறிய பித்தம்-ஜெ தாக்கு
சென்னை: விஜய்காந்த்துக்கு பித்தம் தலைக்கு ஏறிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி விழாவில் அவர் பேசுகையில்,
புரட்சித் தலைவர் எப்போதும் குழந்தைகளிடம் மிகுந்த அன்பு கொண்டவர். அதனால் தான் அவர் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். அன்று இந்த திட்டத்தை எதிர்கட்சிகள், அரசியல் விமர்சகர்கள் கேலி செய்தனர்.
குழந்தைகளை தட்டு ஏந்த வைத்து விட்டார் என்று ஏளனம் செய்தனர். ஆனால் இன்று அவர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை எல்லா மாநிலங்களிலும் கொண்டுவர வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது.
புரட்சித் தலைவர் எழுதி வைத்த உயிலில் ராமாவரம் தோட்டத்தில் வாய் பேசாத மற்றும் காது கேளாத குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் நடத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று அந்த பள்ளியை லதா ராஜேந்திரன் சிறப்பாக நடத்தி வருகிறார். அதற்காக அவரை பாராட்டுகிறேன்.
காது கேளாத குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்க மிகுந்த பொறுமை தேவை.இது பூமா தேவிக்கு இருக்கும் பொறுமையாகும்.
இன்று சிலர் புரட்சித் தலைவரின் பெயரைச் சொல்லிக் கொண்டு திடீர், திடீரென கட்சிகள் தொடங்குகிறார்கள். நான் தான் தலைவர் என்கிறார்கள்.
இன்ஸ்டன்ட்' காபி தயாரித்து விடலாம். ஆனால் இன்ஸ்டன்ட்' தலைவர்களை தயாரிக்க முடியாது. புரட்சித் தலைவரை பார்த்து அவரைப்போல கட்சி தொடங்க வேண்டும் என்று முயற்சி செய்து கட்சி தொடங்குகிறார்கள். இது புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதை மாதிரி உள்ளது.
புரட்சித் தலைவர் அரசியல் கட்சி தொடங்கிய உடனே தலைவர் ஆகி விடவில்லை. முதல்வர் ஆகி விடவில்லை. இளம் வயதில் இருந்தே கட்சிக்காக பாடுபட்டு, கட்சியை வளர்த்தார். அண்ணாவை தலைவராகக் கொண்டு, கலைத்துறையில் சம்பாதித்த பணத்தை எல்லாம் கொட்டி, கொட்டி கட்சியை வளர்த்தார்.
அண்ணா மறைவுக்குப் பிறகு வேறு ஒருவர் (கருணாநிதி) அந்த இயக்கத்துக்கு (திமுக) தலைவராகி விட்டார்.
சில பத்திரிகைகளில் அரசியல் கூட்டணி பற்றி யூகங்கள் வகுக்கின்றன. சிலர் (விஜய்காந்த்- சரத்குமார்) தங்களைப் பற்றி தாங்களே விளம்பரம் செய்து கொண்டு புரட்சித் தலைவரின் வாரிசு என்பது போன்ற மாயையை உருவாக்குகிறார்கள்.
சிலருக்கு சில நேரம் பித்தம் ஏறுவது இயற்கை. பித்தம் தலைக்கு ஏறினால் அவர்களை ஆட விட வேண்டும். அவர்கள் ஆடட்டும். எது வேண்டுமானாலும் பேசட்டும். இந்த பித்தம் தானாகத்தான் இறங்க வேண்டும்.
தேர்தல் வரும்போது தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். பித்தம் இறங்கும் நேரம் விரைவில் வரும். அப்போது பித்தம் தெளியும். தேர்தல் அதன் பிறகு இது கூட்டணி குறித்த யூகங்களும், மாயைகளும், கேள்விகளும் எழாது.
புரட்சித் தலைவர் மறைவுக்குப் பின் அவரது கட்சியை நான் தலைமை ஏற்று நடத்தி வருகிறேன். எனவே எம்ஜிஆரின் வாரிசு என்று வேறு யாராவது சொன்னால் மக்கள் எள்ளி நகையாடுவார்கள்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் உண்மையான வாரிசு நான்தான். இதில் வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றார் ஜெயலலிதா.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications