கைதிகளுடன் பொங்கல் கொண்டாடிய கனிமொழி
சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள கைதிகளுடன் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
சென்னையில் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடந்து வந்தது. நேற்றுடன் இது முடிவுக்கு வந்தது.
இதன் ஒரு பகுதியாக, சங்கமம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழ் மையம் அமைப்பு, சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுடன் பொங்கல் கொண்டாட முடிவு செய்தது.
அதன்படி நேற்று காலை புழல் சிறையில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கனிமொழி கலந்து கொண்டார்.
சங்கமம் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட கனிமொழி இந்த வித்தியாசமான கொண்டாட்டம் குறித்துக் கூறுகையில், காணும் பொங்கலையொட்டி சென்னை புழல் சிறையில் உள்ள 3000 கைதிகளுடன் பொங்கல் கொண்டாடினோம்.
பொங்கல் பரிசாக 20 கலர் டிவி பெட்டிகள், ஒரு இசிஜி பரிசோதனைக் கருவி, புதிய உடைகள், இசைக் கருவிகள், 1000க்கும் மேற்பட்ட பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கினோம் என்றார்.
மேலும் சிறையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு பொம்மைகள், சாக்லேட்டுகள் ஆகியவற்றையும் கனிமொழி வழங்கினார். மேலும், ஆண்கள் சிறையிலும், பெண்கள் சிறையிலும் தனித் தனியாக கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டதாக தமிழ் மைய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications