'நீ'.. ஜெ மீது நடராஜன் ஒருமையில் தாக்கு

Subscribe to Oneindia Tamil

Natarajan
தஞ்சாவூர்: இன்னும் 3 மாதத்தில் நீ திருந்தாவிட்டால் புதிய கட்சி தொடங்கி உன்னை சந்திப்பேன் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஒருமையில் குறிப்பிட்டு மிகக் கடுமையாகத் தாக்கினார் சசிகலாவின் கணவர் நடராஜன்.

சமீபகாலமாக சசிகலா-நடராஜன் ஆதரவாளர்கள் அதிமுகவில் கட்டம் கட்டப்பட்டு வருகின்றனர். இந் நிலையில் தஞ்சையில் கடந்த மூன்று நாட்களாக நடந்த தமிழர் கலை இலக்கிய திருவிழாவின் நிறைவு நாள் கருத்தரங்கில் நடராஜன், ஜெயலலலிதாவை மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

பேச்சு முழுவதும் ஜெயலலிதாவை ஒருமையில் தான் குறிப்பிட்டார். அவரது பரபரப்பு பேச்சு விவரம்

மக்களின் ஓட்டில் ஆட்சியில் அமர்ந்து ெகாண்டு ஏ.கே.-47 பாதுகாப்புடன் தளபதி என்று கூறிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், நான் எப்போதும் மக்களுடன் தான் இருந்து வருகிறேன்.

நான் என்ன செய்தாலும் அதை செய்தியாக்குகிறார்கள். நலம் விசாரிக்க காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை சந்தித்தால் கூட்டணி முடிவாகிவிட்டது என்கின்றனர். நான் அனைவருடனும் அனைத்து சமூகத்தினருடன் சுமூகமாக பழகுகிறேன். ஆனால், என்னுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூற நீ (ஜெயலலிதா) யார்.

இப்போது போயஸ் தோட்டத்தில் நீ இருப்பதற்கு யார் காரணம். இதை 100 முறை கேட்கிறேன். உன் ஜெயா டிவி மூலம் பதில் கூற நீ தயாரா.

கடந்த 1987ம் ஆண்டில் எம்ஜிஆர் இறந்த செய்தியை உன் படைத் தளபதியோ, ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரியோ எவனும் உன்னிடம் கூறவில்லை. நான் தான் என் மனைவியை (சசிகலா) காரில் உன்னிடம் அனுப்பி, ராமாவரம் ேதாட்டத்துக்கு கூட்டிச் செல்ல வைத்து, உன் உயிருக்கும் பாதுகாப்பு அளித்தேன்.

அன்று இரவு நீ தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்ததால் என் மனைவியை உன்னுடன் தங்க வைத்து உயிர் காத்தேன். ஜானகி முதல்வரான நிலையில் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் என பலரையும் உனக்கு ஆதரவு தெரிவிக்கச் செய்து அதிமுகவை கைப்பற்றியது நான்.

இரட்டை இலை யாருக்கு, ராயப்பேட்டை அலுவலகம் யாருக்கு என்று கேஸ் வந்தபோது டெல்லி நீயா ஓடினாய். நான் தானே ஓடினேன், சின்னத்தை காப்பாற்றினேன். சூடு, சொரணை, தைரியம் இருந்தால் மக்களிடம் இதை விளக்கிச் சொல்.

ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் வெளியிட்டபோது அது பத்திரிக்கைகளில் வந்துவிடாமல் தடுத்தது நான். அதற்காக கருணாநிதியால் நான் கைது செய்யப்பட்டேன்.

கருணாநிதியால் கொடுக்கப்பட்ட எனது வேலை (முன்பு அரசு பிஆர்ஓவாக நடராஜனை நியமித்தவர் கருணாநிதி தான்) உனக்கு உதவியதற்காக இழக்க நேரிட்டது. மீண்டும் நீ ஆட்சிக்கு வந்த பின் அந்த வேலையை தந்தாயா.

அன்று நான் இல்லாவிட்டால் இன்று நீ அரசியலிலேயே இல்லாமல் போயிருப்பாய். நான் இந்த மண்ணின் மைந்தன். நீ பிழைக்க வந்தவள் (கர்நாடகத்தில் இருந்து வந்தவர் என்பதை இப்படி சொன்னார்). எம்.ஜி.ஆரால் ஒதுக்கி வைக்கப்பட்ட உன்னை கட்சியில், ஆட்சியில் அமர வைத்த என்னை நீ திட்டும்போது என் மனைவிக்கு எப்படி இருக்கும் என்று சிந்தித்துள்ளாயா. இங்கிதம் தெரியாதவள் நீ.

பொது நிகழ்ச்சிக்கு செல்வோரை தடுக்க நீ யார் (நடராஜனின் நிகழ்ச்சிக்கு வந்த அதிமுகவினரை ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கியது நினைவுகூறத்தக்கது). இனி தமிழக மக்கள் உன்னை முழுவதுமாக புறக்கணிப்பார்கள்.

நீ அரசியலை விட்டு விலகி ஹைதராபாத் ஓட இருந்ததை ஒரு காலத்தில் தடுக்க நான், இப்போது உன்னை எச்சரிக்கிறேன். இன்னும் 3 மாதத்தில் நீ திருந்தாவிட்டால் புதிய கட்சி தொடங்கி உன்னை சந்திப்பேன்.

ஆட்சியை தீர்மானிப்பது பெரும்பான்மையினர் என்பது கருணாநிதிக்குத் ெதரியும் என்பதால் அவர் எச்சரிக்கையாக இருக்கிறார். நீ வீட்டை விட்டே வெளியே வர மாட்டாய். நான் மக்களோடு மக்களாக இருப்பவன்.

உன்னை உருவாக்கிய எம்ஜிஆரை மறந்துவிட்டு ஜெயா டிவி, ஜெயா பிளஸ் டிவிக்களை துவங்குகிறார். விரைவில் நான் எம்ஜிஆர் டிவியை துவங்குவேன். என் தலையை அடகு வைத்தாவது அதை நடத்துவேன் என்றார் நடராஜன் மகா ஆவேசமாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+