பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்
சென்னை: மேற்கு வங்கத்தை ஆட்டிப் படைத்து வரும் பறவைக் காய்ச்சல் நோய் தமிழகத்தில் இல்லை. எனவே மக்கள் எந்தவித பயமும் இல்லாமல் வழக்கம் போல கோழிக் கறி சாப்பிடலாம், முட்டை சாப்பிடலாம் என தமிழக கால்நடைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளஆர்.
அமைச்சர் கீதா ஜீவன், பறவைக் காய்ச்சல் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அவர் கூறுகையில், பறவைக் காய்ச்சல் குறித்து அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதனால் மக்கள் இதுகுறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை. மேற்கு வங்கத்தின் இரு மாவட்டங்களில் மட்டும் பறவைக் காய்ச்சல் இருப்பதை மத்திய அரசு உறுதிப் படுத்தியுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோழிப் பண்ணைகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், பெங்களூரில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி சோதனை செய்யப்பட்டன. இதில், பறவைக் காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும். மேலும் மேற்கு வங்கத்தில் இருந்து கோழிகளை ஏற்ற வரும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படும்.
பறவை காய்ச்சல் பீதியால் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணை வைத்துள்ளவர்கள் பாதிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
இது தவிர மாநிலத்தில் உள்ள 14 பறவைகள் சரணாலயங்களிலும் தீவிரமாக கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் 200 அதிரடிப் படையினர் அமைக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கோழிப் பண்ணைகளுக்குச் சென்று பறவைக் காய்ச்சல் உள்ளதா என பார்வையிட்டு வருகிறார்கள் என்றார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
சர்ப்ரைஸ் ஆய்வில் ஷாக்கான அமைச்சர்.. அன்னூர் சமூக நீதி விடுதியின் அவலம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications