மாமூல் தராத ரேஷன் ஊழியர்களுக்கு அடி-போராட்டம் அறிவிப்பு
திருநெல்வேலி: ரேசன் கடை ஊழியர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை உடனடியாக கைது செய்ய கோரி நெல்லை மாவட்ட ரேஷன் ஊழியர்கள் ஒருநாள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
முன்னாள் கூட்டுறவு பதிவாளர் சுடலைகண்ணுவின் மகன் முருகேசன். இவர் மீது கொலை உள்பட பல குற்றவியல் வழக்குகள் உள்ளன. தற்போது அவர் ரேசன் கடைகளில் மாமூல் கேட்டு தகராறு செய்வது, தர மறுக்கும் ஊழியர்களை தாக்குவது, ஆயுதத்தை காட்டி கொலை மிரட்டல் விடுப்பது போன்ற சமுகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
சம்பவதன்று பாளையங்கோட்டை சாந்தி நகர் ரேஷன் கடையில் மாயாண்டி, மணிராஜகோபால் ஆகியோரிடம் மாமூல் கேட்டு தாக்கியுள்ளார். இதுகுறித்து பாளை போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் அவர்களை கைது செய்யாததால் அவர்கள் மீண்டும் ரேஷன் ஊழியர்களை தாக்கியுளளார்.
எனவே குற்றவாளிகளை உடனே கைது செய்யவும், காவல்துறையின் மெத்தனப்போக்கை கண்டித்தும், மாமூல் கேட்டு அச்சுறுத்தும் சமுக விரோதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் வரும் 22ம் தேதி ரேஷன் கடைகளை ஒருநாள் அடைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஏஐசிசிடியு அலுவலகத்தில் நடந்த மாவட்ட ரேஷன் கடை ஊழியர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications