டாக்டர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு: ரூ.5 கோடி பணம், நகை சிக்கியது
மும்பை: மும்பையில் உள்ள பிரபல டாக்டர்கள் மற்றும் பல்வேறு அதிகாரிகளின் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ரூ. 3 கோடி மதிப்பிலான நகைகள், ரூ. 2 கோடி ரொக்கம் ஆகியவை சிக்கின.
மும்பையின் பிரபல டாக்டர்களான சைலேந்திர சிங், விரால் தேசாய், எஸ்.கபாடியா, உதய் தன்மகர் மற்றும் குடியுரிமை ஆலோசனை அதிகாரி அஸ்கர் அலி மற்றும் பிரகாஷ் சாவ்லா ஆகியோரின் வீடுகளில் இன்று வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் காட்டாமல் இருந்த ரூ.2 கோடி ரொக்கப் பணம் மற்றும் ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் சிக்கின.
மேலும் இவர்களின் பெயரில் உள்ள 12க்கும் மேற்பட்ட வங்கி லாக்கர்களை வரும் திங்கட்கிழமை சோதனை செய்ய உள்ளனர். இதனால் மேலும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகை, பணம் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications