நாசிக் அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 39 பேர் பலி
நாசிக் அருகே சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த 75 சுற்றுலா பயணிகள் நாசிக் அருகில் உள்ள புனித ஸ்தலமான சப்த்சிருங்கி என்ற இடத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.
பேருந்து நாசிக் அருகே நந்துரிகாவ்ன் என்ற இடத்தில் சென்றபோது ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. பஸ்சின் ஓட்டுநர் கீழே குதித்து உயிர் தப்பிவிட்டார்.
பேருந்து பாறை இடிபாடுகளுக்குள் சிக்கியதில் 4 குழந்தைகள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 36 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் போலீசாரும், அப்பகுதியில் உள்ள கிராமத்தினரும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
படுகாயம் அடைந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் நாசிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications