டெண்டுல்கருக்கு 'சர்' பட்டம்?
டெல்லி: இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கு சர் பட்டம் வழங்க வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரவுன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாது உலக கிரிக்கெட்டுக்கும், விளையாட்டுத்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளவர் சச்சின். எனவே அவருக்கு இங்கிலாந்தின் உயரிய பட்டமான சர் பட்டத்தை வழங்கி கெளரவிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
சச்சின் தவிர சுனில் கவாஸ்கர், கபில்தேவ் ஆகியோருக்கும் சர் பட்டம் வழங்கப்பட வேண்டும் என பிரவுன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இங்கிலாந்து முன்னாள் வீரர் இயான் போத்தம், மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பாவன்களான கர்பீல்ட் சோபர்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லி ஆகிய விளையாட்டு வீரர்களுக்கு சர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications