அனுமதி பெறாமல் பாகிஸ்தானுக்குள் நுழைந்த மத்திய அமைச்சர்
டெல்லி: முறையான அனுமதி பெறாமல் வாகா எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தானுக்குள் 2 அடி எடுத்து வைத்த மத்திய வணிகத்துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷூக்கு பாகிஸ்தான் அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமிர்தசரஸ் பகுதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற அமைச்சர் ஜெய்ராம் கூட்டம் முடிந்த பின் அங்குள்ள இந்தியா-பாகிஸ்தானின் முக்கிய எல்லைப் பகுதியான வாகாவுக்கு சென்றார்.
அவருடன் உயர் அதிகாரிகளும் சென்றனர். வாகா எல்லையை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற அவர் சில அடி தூரம் நடந்துவிட்டு பின்னர் திரும்பி விட்டார். அவரை காவலுக்கு நின்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தடுக்கவில்லை.
ஆனால் முறையான அனுமதி பெறாமல் மத்திய அமைச்சர் ஒருவர் பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் எப்படி நுழைந்தார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது,
நான் வாகா எல்லையைத் தாண்டி 2 அடி தான் சென்றேன். உடனே திரும்பி விட்டேன். நான் பாகிஸ்தான் நாட்டுக்குள் செல்லவில்லை என்றார்.
இதுகுறித்து இந்திய குடியுரிமை உயர் அதிகாரிகள் கூறியதாவது,
அமைச்சர் ஆர்வத்தின் காரணமாக வாகா எல்லையை கடந்தார். அவரை காவலுக்கு நின்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கூட தடுக்கவில்லை. இதில் எந்த தவறும் கிடையாது என்றனர்.
அமைச்சர் என்றால் தவறில்லை போலிருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications