சொத்து: அண்ணனை முந்திய அனில்!

டெல்லி: லையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம் அண்ணன் முகேஷ் அம்பானியை முந்தியுள்ளார்.
பிசினஸ் வார இதழான போர்ப்ஸ் கடந்த வருடத்தின் டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டபோது, முதலிடத்தில் லஷ்மி மிட்டலும், 2வது இடத்தில் முகேஷ் அம்பானியும், 3வது இடத்தில் அனில் அம்பானியும் இருப்பதாக தெரிவித்திருந்தது.
ஆனால் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் லிமிடெட் அண்மையில் தனது நிறுவன பங்குகளை வெளியிட்டது. ஜனவரி 15ம் தேதி தொடங்கி 18ம் தேதியுடன் நிறைவடைந்தது.
ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பங்கு வெளியீட்டின் மூலமாக ரூ.11,700 கோடி திரட்ட முடிவு செய்தது. இப்பங்கு வெளியீட்டிற்கு பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி டிசம்பர் மாதம் 28ம் தேதி அனுமதி வழங்கியது.
ரிலையன்ஸ் பவர் மொத்தம் 22.80 கோடி பங்குகளை வெளியிட்டது. ஆனால் பங்குகளை வாங்க 73 மடங்குக்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்தன என்பது குறிப்பிடத்ததக்கது. பங்குச் சந்தை வரலாற்றில் இது பெரிய சாதனையாகும்.
ரிலையன் பவர் நிறுவனத்தில் உள்ள அனிலின் பங்குகளின் விலையை கருத்தில் கொண்டால் அவர் முகேஷை முந்திவிட்டார் என்கிறார்கள்.
அனில் அம்பானியின் இப்போதைய சொத்து மதிப்பு 60.3 பில்லியன் டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ. இரண்டரை லட்சம் கோடி) உயர்ந்துவிட்டதால் அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
லக்ஷ்மி மிட்டலின் சொத்து மதிப்பு 51 பில்லியன் டாலராகவும் (2.4 லட்சம் கோடி), முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 47.5 பில்லியன் டாலர்களாகவும் ( ரூ. 1 லட்சத்து 96 ஆயிரம் கோடி) இருக்கிறது.
உலகின் முதல் பணக்காரர் பின்கேட்ஸ்சின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 2 லட்சத்து 36 ஆயிரம் கோடி. அவரையும் அனில் அம்பானி முந்தி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்ைதப் பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications