ரேஷன் கடைகளில் சிமென்ட் விற்பனை தொடக்கம்
சென்னை: தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு சிமென்ட் விற்பனை செய்யும் திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
சிமென்ட் பற்றாக்குறை மற்றும் கடும் விலை உயர்வு காரணமாக தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருப்போர், குறிப்பாக நடுத்தர வர்க்க மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இதையடுத்து குறைந்த விலையில் ( மூடை ஒன்று ரூ.200க்கு) நியாய விலைக் கடைகள் மூலம் சிமென்ட் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
அந்தத் திட்டம் இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் இந்த ரேஷன் சிமென்ட் நியாய விலைக் கடைகள் மூலம் விற்கப்படும்.
அதன்படி 1000 சதுர அடிக்கு மிகாமல் வீடு கட்டுவோருக்கு அதிகபட்சம் 100 மூடைகள், மூடை ஒன்றுக்கு ரூ. 200 என்ற கணக்கில் வழங்கப்படும்.
இந்த சிமென்ட்டைப் பெற தாசில்தாரிடம் போய் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும். அனுமதி கடிதத்ைதப் பெற வீட்டுக்கான கட்டட வரைபட நகலை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அனுமதி பெற்ற கட்ட வரைபடம் இல்லாதவர்களுக்கும் சலுகை விலையில் சிமென்ட் விற்பனை செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.
-
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications