மதுரையில் ஜாதி சான்றிதழ் கேட்டு நரி, கீரி, பாம்புகளுடன் போராட்டம்
மதுரை: ஜாதி சான்றிதழ் கேட்டு கீரி, நரி, பாம்புகளுடன் காட்டு நாயக்கர் சமூகத்தினர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையை சுற்றிலும் காட்டு நாயக்கர் சமூகத்தினரும், ஆதிவாசிகளும் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்
ஆனால் அவர்கள் கோரிக்கையை இதுநாள் வரை எந்த அதிகாரிகளும் செவிசாய்க்கவில்லை.
ஜாதி சான்றிதழ் இல்லாததால் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முடியாமல் இருப்பதாக தெரிவித்து இன்று தங்கள் குழந்தைகளுடன் அந்த சமூகத்தினர் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு போராட்டம நடத்த வந்தனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதிவாசிகள் அமைப்பின் தலைவர் சின்னராகவன் தலைமை தாங்கினார்.
கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஆதிவாசிகள் தங்களுடன் கீரி, நரி, பாம்புகளையும் கொண்டு வந்தனர்.
அவர்கள் கொண்டு வந்த பாம்பு படமெடுத்து ஆடியதால் அங்கிருந்தவர்கள் அனைவரும் தலைதெறிக்க ஓடினர்.
இவர்களது வினோத போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications