மதுரைக்கு கஞ்சா கடத்த முயன்ற 3 பேர் திருப்பதியில் கைது
திருப்பதி: மதுரைக்கு கஞ்சா கடத்த முயற்சித்த 3 பேரை திருப்பதியில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 120 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம், திருப்பதி மத்திய பேருந்து நிலையத்தில் 3 வாலிபர்கள் டிப்-டாப் உடையணிந்து சாக்கு பைகளுடன் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து வந்த போலீசார் சந்தேகமடைந்து, அவர்களை பிடித்து சோதனை நடத்தினர்.
அந்த வாலிபர்கள் வைத்திருந்த சாக்கு பைகளில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில், கஞ்சா கடத்த முயற்சித்த தர்மலிங்கம் (33), வச்சப்பா (32), தெய்வம் (32) ஆகிய 3 பேரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், ஆந்திர மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் கஞ்சாவை வாங்கி வந்ததும் தெரிய வந்தது.
மதுரைக்குச் செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்தபோது 3 பேரும் பிடிபட்டனர்.
3 பேரும் வைத்திருந்த 120 கிலோ கஞ்சாவையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications