கோளாறு: சென்னை-லண்டன் விமானம் கடைசி நேரத்தில் திடீர் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையிலிருந்து லண்டன் கிளம்ப இருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அது ரத்து செய்யப்பட்டது.
மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று காலை 282 பயணிகளுடன் கிளம்பத் தயாரானது. பயணிகள் அனைவரும் சோதனைகள் முடிந்து விமானத்துக்குள் ஏறி அமர்ந்த நிலையில், விமானி திடீரென பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
விமானத்தில் பெரிய அளவில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர் அனைத்து பயணிகளையும் இறங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். அதில் 40 பேர் மும்பை வழியாக இன்னொரு விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. மற்ற பயணிகள் அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விமானம் நாளை தான் லண்டன் கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications