கலைஞர் டிவியின் புதிய 'இசை சேனல்'

சென்னை: கலைஞர் டிவி குழுமத்திலிருந்து புதிதாக இசையருவி என்ற இசை சேனல் துவக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஒளிபரப்பு துவங்கியுள்ளது.
சன் டிவிக்கும், திமுகவுக்கும் இடையிலான உறவு முறிந்ததும் படு வேகமாக தொடங்கப்பட்டது கலைஞர் டிவி. சன் டிவிக்கு கடும் போட்டியைக் கொடுத்து வரும் கலைஞர் டிவி குழுமத்திலிருந்து தற்போது புதிதாக கலைஞர் இசையருவி என்ற புதிய இசை சேனல் வெளி வருகிறது.
கடந்த 2 நாட்காக இந்த சேனல் தனது சோதனை ஒளிபரப்பைத் தொடங்கி தொடர்ந்து பாடல்களை ஒளிபரப்பி வருகிறது. விரைவில் இதன் முழுமையான ஒளிபரப்பு தொடங்கவுள்ளதாம்.
இதையடுத்து செய்தி சேனல் ஒன்றை தொடங்கவும் கலைஞர் டிவி குழுமம் திட்டமிட்டுள்ளது.
சன்-கலைஞரின் செய்திப் போட்டி:
இதற்கிடையே சன் டிவிக்கும், கலைஞர் டிவிக்கும் இடையிலான போட்டா போட்டி நாளுக்கு நாள் கடுமையாகி வருகிறது. கலைஞர் டிவியின் செய்திகளுக்குப் போட்டியாக, சன் டிவி தனது இரவு நேர செய்தி ஒளிபரப்பு நேரத்தை மாற்றி அமைத்துள்ளது.
முன்பு சன் டிவியில் காலை 8 மணி, பிற்பகல் 1.30 மணி, இரவு 8 மணிக்கு செய்திகள் ஒளிபரப்பாகி வந்தன. மாலை 6 மணிக்கு தலைப்புச் செய்திகள் மட்டும் ஒளிபரப்பாகும்.
கலைஞர் டிவி வந்த பிறகு செய்தி நேரங்களில் அதிரடி மாற்றத்தை செய்தது சன் டிவி.
காலை நேரச் செய்தியை 7.30க்கும், இரவு நேரச் செய்தியை 7.30 மணிக்கும் மாற்றியது. மேலும் மதிய நேரச் செய்தியை ரத்து செய்து விட்டு 2 மணிக்கு தலைப்புச் செய்திகளை ஒளிபரப்பியது சன்.
சன் டிவியின் இந்த மாற்றத்தைத் தொடர்ந்து கலைஞர் டிவியும் போட்டியில் குதித்தது. இரவு நேரச் செய்தியை 7 மணிக்கு மாற்றியது.
சவாலை சந்திக்க சன் டிவியும் நேற்று முதல் தனது இரவு நேரச் செய்தியை 7 மணிக்கு மாற்றி விட்டது.
7.30 மணிக்கு சன் டிவியில் பிரபலமான ஆனந்தம் தொடரும், 8 மணிக்கு மேகலா தொடரும் ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது.
''சபாஷ்.. சரியான போட்டி''!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications