தூங்கும் முன்பு செல்போனில் பேசினால் உடல் நலனுக்கு ஆபத்து

Subscribe to Oneindia Tamil


லண்டன்: தூங்கச் செல்வதற்கு முன்பு படுக்கையில் செல்போனில் பேசினால் உடல் நலத்திற்கு பேராபத்து ஏற்படும். மூளைக்கும் பாதிப்பு ஏற்படும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

செல்போன் கருவியிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால், ஞாபக மறதி மற்றும் தீராத தலைவலி ஆகியவை ஏற்படும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் தூக்கம் சரியாக வராமல் அவதிப்பட நேரிடுமாம்.

சரியாக தூங்காவிட்டால் மனச் சோர்வு, கவனக்குறைவு போன்ற குறைபாடுகள் ஏற்படும். மேலும் குழந்தைகள், டீன் ஏஜ் வயதினர் சரியாக படிக்க முடியாமல் சிரமப்பட நேரிடுமாம்.

ஸ்வீடனில் உள்ள உப்பசாலா பல்கலைக்கழகம், கரோலின்ஸ்கா கல்வி நிறுவனம், மிச்சிகனில் உள்ள வேயன் ஸ்டேட் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இந்த எச்சரிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன.

செல்போன் கருவியிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சு மூளையை நேரடியாக பாதிக்கும் அபாயமும் உள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+