லஞ்சம் வாங்கிய சிதம்பரம் ஆர்.டி.ஓ. கைது

Subscribe to Oneindia Tamil

கடலூர்:லஞசம் வாங்கிய சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியரை (ஆர்.டி.ஒ.) போலீசார் கைது செய்யதனர்.

சிதம்பரம் ஆர்.டி.ஒ. குழந்தைவேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணல் கடத்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எலவனாசூர் கோட்டையிலிருந்து சீர்காழிக்கு கருங்கல் ஏற்றிக் கொண்டு சென்ற லாரியை மடக்கி சோதனை செய்து, முறையான ஆவணங்களை இல்லை எனக் கூறி போலீசில் ஒப்படைத்தார்.

இந்த நிலையில் லாரியை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.5,000 லஞ்சம் கேட்டு லாரி உரிமையாளர் சிராஜூதீனை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத லாரி உரிமையாளர் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், வெங்கடேசன், மற்றும் போலீசார் சிதம்பரம் ஆர்.டி.ஒ. அலுவலகத்திற்கு வந்து மறைந்திருந்தனர்.

அப்போது சிராஜூதீன் ரூ. 5000 லஞ்ச பணத்தை குழந்தைவேலுவிடம் கொடுத்தார். இதையடுத்து மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார்
கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர்.

லஞ்ச வழக்கில் ஆர்.டி.ஓ கைது செய்யப்பட்ட சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+