தை-தமிழ்ப் புத்தாண்டு: வீரமணி பெரும் மகிழ்ச்சி
சென்னை: தமிழகத்தில் பெரியார் கொள்கையுடைய ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சட்டசபையில் ஆளுநர் அறிவிப்பில் அரசின் இரு கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 240 பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் பெரியார் சிலை நிறுவப்படும் என்றும், தை மாதம் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெரியார் கொள்கையுடைய ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதால் சமூக சிந்தனையோடு இத்தகைய மதிப்புறு செயல்பாடுகளை காணமுடிகிறது.
பெரியார் உருவத்தை காணும் தோறும் அவர்களின் கொள்கைகளை, சாதனைகளை மக்கள் மத்தியிலே அசைபோட வைக்கும்.
தை மாதம் முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கைக்கும் வெற்றி கிடைத்துள்ளது. தமிழர் பண்பாட்டு வரலாற்றுத் திசையில் புதியதோர் மறுமலர்ச்சி அத்தியாயம் இது. தமிழர்களின் ஒப்புயர்வற்ற ஆட்சியைத் தமிழர்கள் கண்ணின் இமையாக இருந்து காப்பாற்றுவோம் என்று தமிழர்கள் உறுதி எடுத்துக் கொள்வார்களாக என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அதில் கி.வீரமணி கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications