இந்த ஆண்டும் பாரத ரத்னா கிடையாது

Subscribe to Oneindia Tamil

Asoka Pillar

டெல்லி: பாரத ரத்னா விருது பெரும் அரசியல் சர்ச்சையாக்கப்பட்டு விட்டதால் இந்த ஆண்டும் யாருக்கும் பாரத ரத்னா விருது இல்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து 7வது ஆண்டாக பாரத ரத்னா விருது யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருது பாரதரத்னா. இந்த விருதினை இதுவரை 40 பேர் பெற்றுள்ளனர். அவர்களில் 10 பேருக்கு, மரணத்திற்குப் பின்னர் பாரத ரத்னா வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விருது குறித்து பெரும் சர்ச்சை கிளம்பியது. வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருதினை தர வேண்டும் என பாஜக முதலில் கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அத்வானி கடிதம் எழுதினார்.

இதற்கு மத்திய அமைச்சர் பி.ஆர். தாஸ் முன்ஷி கடும் கண்டனம் தெரிவித்தார். பாரத ரத்னா விருதுக்கு இது மரியாதை இல்லை என்று அவர் கண்டித்தார்.

இதையடுத்து பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து மறைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்ஷிராமுக்கு விருது தர வேண்டும் என உ.பி. முதல்வர் மாயாவதி கோரிக்கை எழுப்பினார். தொடர்ந்து பல்வேறு பெயர்கள் இந்த விருதுக்கு பலராலும் பரிந்துரைத்து கோரிக்கை எழுப்பப்பட்டன. கடைசியாக சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா தர வேண்டும் என முன்னாள் கிரிக்ெகட் பயிற்சியாளர் அஜீத் வடேகர் கோரிக்கை விடுத்தார்.

பாரத ரத்னா விருது பெரும் சர்ச்சையைக் கிளப்பியதால் இந்த ஆண்டும் யாருக்கும் பாரத ரத்னா விருதினைத் தருவதில்லை என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ முடிவு இன்று எடுக்கப்பட்டது.

கடந்த 2001ம் ஆண்டுதான் கடைசியாக பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. உஸ்தாத் பிஸ்மில்லா கான் மற்றும் லதா மங்கேஷ்கருக்கு அந்த ஆண்டு குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், பாரத ரத்னா விருதினை வழங்கி கெளரவித்தார். அதன் பின்னர் கடந்த 7 ஆண்டுகளாக யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்ைல என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பாரதரத்னா விருதினைப் பெற்றவர்கள் விவரம் வருமாறு

1. லதா தினாநாத் மங்கேஷ்கர் (2001-கலை).
2. உஸ்தாத் பிஸ்மில்லா கான் (2001-கலை).
3. பேராசிரியர் அமார்த்யா சென் (1999-இலக்கியம்-கல்வி).
4. லோக்பிரியா கோபிநாத் போர்தோலாய் (1999-பொது விவகாரம்).
5. லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் (1999-பொது விவகாரம்).
6. பண்டிட் ரவி சங்கர் (1999-கலை)
7. சி.சுப்ரமணியம் (1998-பொது விவகாரம்).
8. எம்.எஸ்.சுப்புலட்சுமி (1998-கலை).
9. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (1997-அறிவியல்-பொறியியல்).
10. அருணா ஆசப் அலி (1997-பொது விவகாரம்).
11. குல்ஜாரி லால் நந்தா (1997-பொது விவகாரம்).
12. ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (1992-வர்த்தகம்-தொழில்)
13. மெளலானா அபுல் கலாம் ஆசாத் (1992-பொது விவகாரம்).
14. சத்யஜித் ரே (1992-கலை).
15. மொரார்ஜி தேசாய் (1991- பொது விவகாரம்).
16. ராஜீவ் காந்தி (1991- பொது விவகாரம்).
17. சர்தார் வல்லபாய் படேல் (1991- பொது விவகாரம்)
18. டாக்டர் அம்பேத்கர் (1990-பொது விவகாரம்).
19. டாக்டர் நெல்சன் மண்டேலா (1990-பொது விவகாரம்).
20. எம்.ஜி.ஆர். ராமச்சந்திரன் (1998- பொது விவகாரம்).
21. கான் அப்துல் கபார் கான் (1987-சமூக சேவை).
22. ஆச்சார்ய வினோபாபவே (1983-சமூக சேவை).
23. அன்னை தெரசா (1980-சமூக சேவை).
24. கு.காமராஜ் (1976-பொது விவகாரம்).
25. வி.வி.கிரி (1975- பொது விவகாரம்).
26. இந்திரா காந்தி (1971-பொது விவகாரம்).
27. லால் பகதூர் சாஸ்திரி (1966-பொது விவகாரம்).
28. பாண்டுரங்க வான் கானே (1963-சமூக சேவை).
29. டாக்டர் ஜாகிர் உசேன் (1963-பொது விவகாரம்).
30. டாக்டர் ராஜேந்திர பிரசாத் (1962-பொது விவகாரம்).
31. டாக்டர் பி.சி.ராய் (1961-பொது விவகாரம்).
32. புருஷோத்தம் தாஸ் டாண்டன் (1961-பொது விவகாரம்).
33. டாக்டர் டோண்டே கேசவ் கார்வே (1858- சமூக சேவை).
34. பண்டிட் கோவிந்த் வல்லப் பந்த் (1957-பொது விவகாரம்).
35. டாக்டர் பகவான் தாஸ் (1955- இலக்கியம், கல்வி).
36,. பண்டிட் ஜவஹர்லால் நேரு (1955- பொது விவகாரம்).
37. டாக்டர் விஸ்வேஸ்வரய்யா (1955- சிவில் சர்வீஸ்).
38. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி (ராஜாஜி) (1954- பொது விவகாரம்).
39. டாக்டர் சர் சி.வி.ராமன் (1954-அறிவியல், பொறியியல்).
40. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1954 - பொது விவகாரம்).

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+