பில்டர்கள், காண்டிராக்டர்களுக்கு ரூ. 160க்கு சிமென்ட் - தமிழக அரசு
சென்னை: பில்டர்கள், பில்டிங் காண்டிராக்டர்கள், கட்டுமானத் தொழில் துறையில் இருப்போர், சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு வந்துள்ள இறக்குமதி சிமென்ட்டை மூடை ரூ. 160 என்ற விலையில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இறக்குமதி செய்யப்பட்ட ஓபிசி 43 ரக சிமென்ட்டை சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூட்டைக்கு ரூ. 160 என்ற விலையில் பெற்றுக் கொள்ள தமிழ்நாடு சிமென்ட் கழகம் (டான்செம்) ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சிமென்ட்டைப் பெற விரும்புவோர் (பொதுமக்கள் உள்பட) குறைந்தது 480 மூடைகளைப் (24 டன் கொண்ட கன்டெய்னர்) பெற முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
சிமென்ட்டை கொண்டு செல்வது, கண்டெய்னர்களிலிருந்து இறக்குமதி, தர மதிப்பீடு செய்து கொள்வது ஆகியவை வாங்குவோரின் பொறுப்பாகும்.
இந்த இறக்குமதி சிமென்ட்டைப் பெற விரும்புவோர், பொது மேலாளர் (விற்பனை), டான்செம்-மில் தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அல்லது 044-28525477 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பெயர்களைப் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications