வேனில் பொருத்திய காஸ் சிலிண்டர் வெடித்து 4 பள்ளிக் குழந்தைகள் பலி
மும்பை: மும்பையில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்ற வேனில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.
மும்பை புறநகர் பகுதியான ஒசிவாராவில் உள்ள மில்லட் நகரில் மில்லட் உயர்நிலைப்பள்ளி உள்ளது.
இன்று பிற்பகல் 1-20 மணிக்கு பள்ளி முடிந்ததும் பள்ளி வேனில் குழந்தைகளை வீடுகளில் இறக்கி விடுவதற்காக 11 குழந்தைகளை வேனில் ஏற்றியுள்ளார் வேன் டிரைவர்.
பின்னர் வேனை ஸ்டார்ட் செய்துள்ளார். அப்போது வேனில் இருந்த காஸ் சிலிண்டர் பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் வேனில் இருந்த 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்ற குழந்தைகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் மேலும் ஒரு குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தது.
வேனில் இருந்த குழந்தைகள் அனைவரும் 5 முதல் 6 வயதுக்குட்பட்டவர்கள்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து வேன் டிரைவர் ரபீக் குரேஸியை கைது செய்தனர். இந்த வேன் மில்லட் பள்ளிக்கு ஒப்பந்த முறையில் இயக்கப்படுகிறது.
விபத்து குறித்து வேனின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications