அண்ணா சாலையில் கவிழ்ந்த கண்டெய்னர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில், அண்ணா சாலையின் நடுவே கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பெரும் பாதிப்படைந்தது.
சென்னை துறைமுகத்திலிருந்து ஒரு கண்டெய்னர் லாரி இன்று அதிகாலை மேடவாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
சைதாப்பேட்டை பஸ் நிலையப் பகுதியில் அந்த கண்டெய்னர் வந்தபோது சாலையின் நடுவே உள்ள தடுப்பின் மீது மோதியது. மோதிய வேகத்தில் சாலையின் நடுவே லாரி கவிழ்ந்தது.
இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து தடைபட்டது. பிற்பகல் 1 மணி வரை லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் கிண்டியிலிருந்து அண்ணா சாலையில், பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாகனங்கள் அனைத்தும் அப்படியே நின்றதால் அந்தப் பகுதியே ஸ்தம்பித்துப் போனது.












Click it and Unblock the Notifications