டாக்டர் பிரகாஷுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!

சென்னை: செக்ஸ் டாக்டர் பிரகாஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஆனால் அவரது கூட்டாளிகள் 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் கிடைத்து விட்டது.
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, சிடியில் பதிவு செய்தும் அவற்றை இணையதளம் மூலம் விற்றதாக கடந்த 2001ம் ஆண்டு டாக்டர் பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது டிரைவர் விஜயன், ஆசிப் உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நான்கு பேரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி பலமுறை மனு தாக்கல் செய்தும் பிரகாஷுக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அவரது கூட்டாளிகள் 3 பேரும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் இன்று நீதிபதி சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பிரகாஷுக்கு ஜாமீன் தர போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரகாஷின் கோரிக்கையை நீதிபதி தள்ளுபடி செய்தார். இருப்பினும் மற்ற 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிபதி சுதந்திரம் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications