கடலில் மிதக்கும் இலங்கை கண்ணிவெடிகள்: போலீஸ் எச்சரிக்கை
வேதாரண்யம்: இலங்கை கடற்படை கடலில் மிதக்கும் கண்ணிவெடிகளை வைத்துள்ளது குறித்து அனைத்து மீனவ கிராமங்களுக்கும் சென்று போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நடக்கும் சண்டை உக்கிரத்தை அடைந்துள்ளது. இதனால் இலங்கை கடற்படையினர் கடலில் மிதக்கும் கண்ணிவெடிகளை வைத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக காவல்துறை அதிகாரிகள் ஒவ்வொரு மீனவ கிராமங்களுக்கும் சென்று மீனவர்களிடேயை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக வேதாரண்யத்தில் போலீஸ் எஸ்பி சந்திரசேகரன் மீனவர்களிடையே பேசியதாவது, இலங்கையில் நிலவும் பதட்டமான சூழலால் இலங்கை ராணுவத்தினர் பல்வேறு கடல்பகுதியில் ரோந்து செல்கின்றனர்.
தற்போது இலங்கை நெடுந்திரு முதல் கச்சத்தீவு வரை இலங்கை கடற்படையினர் கண்ணிவெடிகளை அதிகளவில் வீசிச் சென்றுள்ளதாகவும், அவை கடலில் மிதப்பதாகவும் எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன.
அதனால் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கடலில் மிதக்கும் சந்தேகத்துக்கிடமான எந்த பொருட்களையும் எடுக்க வேண்டாம். அவ்வாறு பொருட்கள் கிடைப்பதாக பார்த்தால் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கண்ணிவெடிகள் வெடித்தால் படகுகள் சேதம் ஏற்படுவதுடன் உயிர் பலியும் ஏற்படும் என்பதால் போலீசார் நாகை, தூத்துக்குடி, வேதாரண்யம், ராமநாதபுரம் அனைத்து மீனவ கிராமங்களுக்கும் சென்று போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடலில் கண்ணிவெடிகளை மிதக்கச் செய்துள்ள இலங்கை அரசின் செயலுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் இந்த விஷயத்தில் பெரும் மெளம் சாதித்து வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications