இந்தோனேசியா: சுகர்தோ உடல் அடக்கம்
சிங்கப்பூர்: மறைந்த முன்னாள் இந்தோனேசிய அதிபர் ஹாஜி முகம்மது சுகர்தோவின் உடல் ஜாவா தீவில் உள்ள அவரது குடும்ப கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்தோனேசியாவை 32 ஆண்டு காலம் ஆட்சி புரிந்தவர் சுகர்தோ. உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்த சுகர்தோ நேற்று மரணமடைந்தார். அவரது உடல் ஜாவா தீவில் உள்ள குடும்ப கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் சுசிலோ பம்பாங் யுதோயனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தியவர் என்ற பெயர் சுகர்தோவுக்கு இருந்தாலும், இந்தோனேசியாவை இரும்புக் கரம் கொண்டு ஆட்சி புரிந்தவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. கம்யூனிஸ்ட் கட்சியை ஒடுக்க அவர் மிகக் கடூரமாக நடந்து கொண்டார். 5 லட்சம் பேரை அவர் கொன்று குவித்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
1960களில் இந்தோனேசியாவின் நிறுவனரும், முதல் அதிபருமான சுகர்னோவிடமிருந்து ஆட்சியைப் பிடித்து அதிபரானவர் சுகர்தோ, அதன் பின்னர் 32 ஆண்டுகள் அவரது பிடியில்தான் இந்தோனேசியா இருந்தது.
ஆசிய நாடுகள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்தபோது 1998ம் ஆண்டு மே மாதம் பதவியிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications