Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீருக்கும் பரவியது பறவைக் காய்ச்சல்?

Subscribe to Oneindia Tamil


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக பரபரப்பு நிலவுகிறது. அங்கு இரண்டு வெளிநாட்டுப் பறவைகள் இறந்து கிடந்ததையடுத்து அவரை சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தை பறவைக் காய்ச்சல் ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீருக்கும் இது பரவியுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அங்கு இரண்டு வெளிநாட்டுப் பறவைகள் இறந்து கிடந்தன. அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து இரு பறவைகளையும் போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு மாநில அரசு அனுப்பி வைத்துள்ளது.

பறவைக் காய்ச்சல் பீதியைத் தொடர்ந்து வெளி மாநிலங்களிலிருந்து கோழிகளை இறக்குமதி செய்ய மாநில அரசு தடை விதித்துள்ளது.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் பறவைக் காய்ச்சல் இல்ைல என்று கால்நடை மருத்துவர் டாக்டர் காலூ கூறியுள்ளார்.

ஆனால் அரசு அதிகாரிகளோ இரு பறவைகள் மட்டுமல்லாமல், ஏராளமான கோழிகளும் இறந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக வெளியாகியுள்ள தகவலைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்ைககள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கொல்கத்தாவை நெருங்குகிறது

இந் நிலையில் பறவைக் காய்ச்சல் கொல்கத்தாவையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் கொல்கத்தாவில் முழு அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது மேலும் 2 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 19 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது. தற்போது தெற்கு 24 பர்கானா மற்றும் மேற்கு மிதினாப்பூர் மாவட்டங்களுக்கும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. இதையடுத்து பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

இரு மாவட்டங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதைத் தொடர்ந்து இன்று முதல் அங்குள்ள லட்சக்கணக்கான கோழிகளைக் கொல்லும் பணி தொடங்கியுள்ளது.

மேற்கு மிதினாப்பூர் மாவட்டம், சக்பெல்ச்சா கிராமத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. இங்குள்ள கோழிகளின் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் பட்ஜ் கிராமத்தில் பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது.

இந்த நிலையில் கொல்கத்தாவுக்கு வெகு அருகே வரை பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதால் விரைவில் கொல்கத்தாவுக்கும் பறவைக் காய்ச்சல் தாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கொல்கத்தாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் இதுவரை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1.25 லட்சம் கோழிகள் இறந்துள்ளன. 15.75 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+