உறவுக்கு மறுத்த மருமகளை தீ வைத்து கொளுத்த முயன்ற மாமனார்
நெல்லை: உடலுறவுக்கு வர மறுத்த மருமகளை தீ வைத்து கொளுத்த முயன்ற மாமனார் மீது மருமகள் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், தச்சநல்லூரில் உள்ள பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். சென்னையில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வரும் இவருக்கும், பாளை சாமாதனபுரத்தை ஆனந்தவள்ளிக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆனந்தவள்ளிக்கு அவருடைய மாமனார் ராஜ் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். ராஜ் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
மாமனாரின் பாலியல் தொல்லை குறித்து தனது கணவரிடம் ஆனந்தவள்ளி புகார் கூறியும் அதை அவர் காதில் வாங்கவில்லையாம்.
இதனால் மனமுடைந்த ஆனந்தவள்ளி, மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதவை சந்தித்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகார் அளித்த பின்னர் ஆனந்தவள்ளி கூறியதாவது,
கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் சேர்ந்து என்னிடம் கூடுதலாக 10 பவுன் நகை, ரூ.25,000 கேட்டு கொடுமைப்படுத்தினர். இது மட்டுமில்லாது மாமனாரின் பாலியல் தொந்தரவுக்கு நான் மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் என்மீது மண்ணென்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தவும் முயன்றனர். நான் அவர்களிடம் தப்பித்து என் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications