துபாயில் 'கைகோர்த்த' திமுக-அதிமுக

Subscribe to Oneindia Tamil


துபாய்: துபாயில் வளைகுடா தமிழர் பேரவை நடத்திய விழாவில் தமிழகத்தை சேர்ந்த திமுக, அதிமுக பிரமுகர்கள் இணைந்து பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

துபாயில் வளைகுடா தமிழர் பேரவை சார்பில் கடந்த 28ம் தேதி (நேற்று)நடந்த விழாவில் திமுகவைச் சேர்ந்த கும்பகோணம் நகர சபைத் தலைவர் அன்பு, திருவாரூர் மாவட்ட அதிமுக தொழிற்சங்கத் தலைவர் மலர்வேந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்களை வளைகுடா தமிழர் பேரவை சார்பாக கபீர் வரவேற்றார். ஸ்கை எக்ஸ்பிரஸ் இயக்குநர் செய்யது அப்துல் காதர் (சினா தானா) தனது உரையில் சமூக நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து விவரித்ததுடன், கல்வியின் அவசியம் குறித்துப் பேசினார்.

மலர்வேந்தன் பேசுகையில், அமீரக மன்னராட்சி மதிக்கத்தக்க வகையில் இருக்கிறு. நமது நாட்டில் சமதர்மம், உரிமை கொடுத்திருப்பது பல்வேறு விபரீத முடிவுகளைத் தந்து வருகிறது.
இந்தியா குறிப்பாக தமிழகம் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறது. எதிர்காலத்தில் வெளிநாட்டினரே நமது நாட்டிற்கு வேலை தேடி வரும் சூழல் ஏற்படலாம் என்றார்.

அன்பு பேசுகையில், தமிழகத்தில் இரு துருவங்களாக இருக்கும் மலர்வேந்தனும், நனும் இங்கு ஒரே மேடையில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துத்துகிறது. அமீரகத்தில் இருக்கும் இத்தகைய தமிழர் பண்பாடு தமிழகத்திலும் வர வேண்டும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது வருமானத்தை முறையாக சேமித்து எதிர்காலத்திற்கு பயனளிக்கும் வண்ணம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் சங்கமம் தொலைக்காட்சி இயக்குநர் கலையன்பன் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர். விழாவில் அஜ்மான் மூர்த்தி, சபீர் அஹ்மது, ஜெயந்தி சுரேஷ், குடந்தை இஸ்லாமுதீன், அண்ணாதுரை உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் ஆல்பர்ட் நன்றி கூறினார். அன்வர் பாஷா தொகுத்து வழங்கினார். இந்த பாராட்டு விழாவில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+