கட்சி தாவல் 3 பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் பதவி பறிப்பு

டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து சமாஜ்வாடி கட்சிக்கு தாவிய 3 எம்.பி.க்களின் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களான பாலசந்திர யாதவ், ரமாகாந்த் யாதவ், முகமது ஷாகித் அக்லாக் ஆகிய மூவரும் கடந்த 2006ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி முலாயம் சிங் யாதவின் சமாஜ் வாடிக் கட்சிக்குத் தாவினர்.
இதையடுத்து கட்சித் தாவல் தடை சட்டப்படி, இந்த எம்.பி.க்களின் பதவியை பறிக்குமாறும், அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளை காலியிடங்களாக அறிவிக்குமாறும் பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற கடசித் தலைவர் ராஜேஷ்வர்மா, லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியிடம் மனு கொடுத்தார்.
அந்த மனுவை உரிமைக்குழு விசாரணைக்கு சபாநாயகர் அனுப்பி வைத்தார். விசாரணைக்கு பின்னர் கிஷோர் சந்திரா தலைமையிலான உரிமைக்குழு, இந்த புகார் பற்றி விசாரணை நடத்தி சபாநாயகரிடம் அறிக்கை சமர்பித்தது.
அதன் அடிப்படையில் கடந்த மாதம் 10ம் தேதி சமாஜ்வாடி கட்சிக்கு தாவிய 3 எம்.பி.க்களிடமும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ராஜேஷ் வர்மா ஆகியோரிடம் தனித்தனியாக சோம்நாத் சட்டர்ஜி விசாரணை நடத்தினார்.
இதன் பின்னர் தற்போது 3 பேரின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவிக்கையில், மனுதாரர் அளித்த தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலும், 3 எம்.பி.க்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையிலும் பார்க்கும்போது, 3 எம்.பி.க்களும் தாங்களாகவே முன்வந்து பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி இருப்பதாகவே தெரிகிறது.
சமாஜ்வாடி கட்சியில் 3 எம்.பி.க்களும் சேர்ந்ததாக பத்திரிக்கைகளில் வெளியான செய்திக்கு 3 எம்.பி.க்களும் நியாயமான விளக்கம் அளிக்கத் தவறிவிட்டனர். அவர்களுக்கு எதிராக பத்திரிக்கைகள் சதி செய்வதாக கூற முடியாது.
எனவே கட்சித்தாவல் தடை சட்டப்படி 3 எம்.பிக்களும் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications