காவிரி: நடுவர் மன்ற இறுதி விளக்கத்தை ஏற்க வேண்டும்-மத்திய அரசு
டெல்லி: காவிரி நதி நீர் பங்கீடு குறித்த இறுதித் தீர்ப்பில் கர்நாடகம் தமிழகம், உள்ளிட்ட மாநிலங்கள் சில சந்தேகங்களை எழுப்பி அதற்கான விளக்கத்தை நடுவர் மன்றத்திடம் கோரியுள்ளன. நடுவர் மன்றம் தரவுள்ள விளக்கத்துக்காக மத்திய அரசு காத்துக் கொண்டுள்ளது. அந்த விளக்கத்தை நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பாக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் கூறியுள்ளார்.
டெல்லியில் சமூக பிரச்சினைகள் தொடர்பான 8வது மாநாடு இன்று நடந்தது. இதில், சைபுதீன் சோஸ் பேசுகையில்,
2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை அளித்தது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய அனைத்து மாநிலங்களின் கருத்துக்களையும் கேட்ட பின்னர் இந்த இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் இறுதித் தீர்ப்பு தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் விளக்கம் கேட்டுள்ளன. இந்த இறுதி விளக்க அறிக்கைக்காக மத்திய அரசு காத்துள்ளது.
இறுதி விளக்க அறிக்கை வெளியான பின்னர் அனைத்து தரப்பினரும் அதை இறுதித் தீர்ப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த இறுதித் தீர்ப்புக்கு தேசம் கட்டுப்பட்டாக வேண்டும் என்றார் சோஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications