சூரிய ஒளியில் மின்சாரம்-தமிழக அரசு தீவிரம்
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்ட தடுக்க குறைந்த செலவில் சூரிய மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
இன்று சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது அவர் கூறியதாவது,
தற்போது மின்சாரம் தயாரிப்பதற்கான ஒரு காற்றாலை அமைப்பதற்கு ரூ.1.5 கோடியும் , 1 மெகாவாட் அனல் மின்சாரம் தயாரிக்க ரூ. 4 கோடியும் செலவாகிறது.
சூரிய ஒளி மூலம் 1 யூனிட் மின்சாரம் தயாரிப்பதற்கான கருவிகளை பொருத்த ரூ.25 கோடி செலவாகிறது. கருவிகளைப் பொருத்திவிட்டால் பின்னர் செலவு ஏதும் இல்லை.
ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகளில் 1 யூனிட் மின்சார தயாரிப்புக்கு தேவையான கருவிகள் அமைக்க ரூ.12 கோடிதான் செல்விடுகிறார்கள். இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்து வர நமது அதிகாரிகள் அங்கு சென்றுவர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அவர்கள் சென்று வந்த பின் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கும்.
காற்றாலை அமைத்துள்ள தனியார்களிடம் ஏராளமான நிலம் உள்ளது. குறைந்த செலவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க வாய்ப்பு வரும்போது அவர்களும் அந்த கருவிகளை அமைக்க தயாராகவே உள்ளனர்.
சூரிய ஒளி மூலம் அதிக மின் உற்பத்தி செய்யப்பட்டால் வருடத்தில் மழை பெய்யும் 25 நாட்கள் தவிர மற்ற நாட்களில் தட்டுப்பாடே இல்லாமல் மின்சாரம் பெற முடியும் என்றார் வீராசாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications