சென்னை-எச்சில் துப்பினால் ரூ50 அபராதம்!
சென்னை: சென்னையில் பொது இடத்தில் எச்சில் துப்பினாலோ, சிறுநீர் கழித்தாலோ, குப்பையை வீசினாலோ அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
வீடுகளின் வெளிப் பகுதிகளை சுத்தமாக வைக்காத வீட்டின் உரிமையாளர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தெடார்பான தீர்மானம் இன்று நடந்த சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சென்னையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரோட்டில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல், பொதுக் குழாயில் நின்று குளித்தல், நடுரோட்டில் குளியல் போடுதல், குப்பையை வீசுதல் ஆகிய குற்றங்களுக்கு ரூ. 50 அபராதம் விதிக்கப்படவுள்ளது.
சாலைகளில் குப்பையை எரிப்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தங்களது வீட்டின் வெளிப் பகுதியை சுத்தமாக வைக்காத வீட்டின் உரிமையாளர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பான்பராக் போன்ற வஸ்துகளை மென்று சாலைகளை 'ரத்தக் களறியாக்கி' (ரத்தக் கலராக்கி) வைப்போருக்கு இந்த தண்டனை மிக மிக அவசியமான ஒன்று தான்.
ஆனால், பொதுக் கழிப்பிடங்களை முதலில் மாநகராட்சி சுத்தமாக வைத்தால் தான் சிறுநீர் கழிக்க மக்கள் உள்ளே போவார்கள். கழிப்பிடத்தின் வெளிப்பகுதி உள் பகுதியை விட 'சுத்தமாக' இருந்தால் மக்கள் எப்படி உள்ளே காலடி வைப்பார்கள் என்பதை மாநகராட்சி யோசிக்க வேண்டும்.
மேலும் சென்னையில் பொதுமான அளவுக்கு பொதுக் கழிப்பிடங்கள் உள்ளனவா என்பதையும், அந்தக் கழிப்பிடங்களில் தண்ணீர் வசதி உள்ளதா என்பதையும் மாநகாட்சி பார்க்க வேண்டும்.
'பாட்டமே' இல்லாத பக்கெட், எல்லா பக்கமும் லீக் ஆகாத குவளைகள் அற்ற கழிப்பிடங்களை மாநகராட்சி அமைத்துத் தந்தால் பொது இடங்களை நிச்சயமாக சுத்தமாக வைக்க முடியும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications