2ம் வகுப்பு மாணவிக்கு ஸ்கேல் அடி-ஆசிரியர் மீது புகார்
சென்னை: சென்னை அருகே மாணவியை ஸ்கேலால் அடித்த ஆசிரியர் மீது மாணவியின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
சென்னையை அடுத்துள்ள பம்மல் முத்தமிழ் நகரைச் சேர்ந்த டேனியல்-ஸ்டெல்லா தம்பதியினரின் மகள் கிளாடிஸ் (6). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை பள்ளியிலிருந்து திரும்பும்போது அழுது கொண்டே வந்துள்ளார் கிளாடிஸ். இதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அவர் படிக்கும் வகுப்பு தோழிகளிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது, ஆசிரியர் போர்டில் பாடம் எழுதிப்போடும் போது தாமதமாக எழுதியதால், அவர் ஸ்கேலால் கிளாடிஸை அடித்ததாக அவர்கள் கூறினர். இதையடுத்து டேணியலும், ஸ்டெல்லாவும் பள்ளி முதல்வரை சந்தித்து பேசினர்.
ஆனால் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து ஆசிரியர் மீது பல்லாவரம் காவல் நிலையத்தில் டேணியல் புகார் செய்தார்.
இதுகுறித்து போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி கிளாடிஸின் கையில் ரத்தம் கட்டியுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடமும் புகார் அளிக்க உள்ளதாக டேணியல் தெரிவித்தார்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications