பெட்ரோல் விலை உயர்வு: இடதுசாரிகள் எச்சரிக்கை
சென்னை: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தால், அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெற நேரிடும் என இடதுசாரிகள் மிரட்டியுள்ளன.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு உறுதியாக தீர்மானித்தால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான உறவு பலவீனமடையும். நாங்கள், மத்திய கூட்டணி அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெற நேரிடும்.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் அதைக் கண்டித்து தேசிய அளவில் பெரும் போராட்டத்திலும் இடதுசாரிகள் ஈடுபடுவார்கள்.
விலையை உயர்த்துவதற்குப் பதில், வரி விகிதத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்களின் தலையில் பளுவை ஏற்றாமல் தடுக்கலாம்.
பெட்ரோலியம் மற்றும் சுரங்கப் பிரிவில், வெளிநாட்டு நேரடி முதலீட்டை மத்திய அரசு ஏன் அனுமதிக்கிறது என்றே புரியவில்லை. இதனால், நாட்டின் பொருளாதாரம் மேலும் பலவீனமடையும் என்றார் ராஜா.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications