சிறுமி கற்பழிப்பு- நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் அலட்சியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 14 வயது சிறுமியைக் கற்பழித்த இரு இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையரிடம் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகார் கொடுத்தார்.

சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள மூவரசம் பேட்டையை சேர்ந்தவர் ரபியா. கணவர் இறந்து விட்டதால் மகள்கள் கைரூன் (14), பர்வீன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் அந்த பகுதியை சேர்ந்த பெயிண்ட் வேலை செய்யும் செல்வம், வெங்கடேசன் ஆகிய இரு வாலிபர்கள் குடியோதையில் வீட்டுக்குள் நுழைந்து சிறுமி கைரூனை கற்பழித்தனர்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீஸார் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரபியா இன்று மாநகர காவல்துறை ஆணையரிடம் நேரில் புகார் கொடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+