துபாயில் இன்று ஆரோக்கிய அறிவியல் நிகழ்ச்சி
துபாய்: துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) அமைப்பு ஆரோக்கிய அறிவியல் எனும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சியினை இன்று நடத்துகிறது.
இன்று திங்கட்கிழமை மாலை துபாய் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் (அல் முதினா லூலூ செண்டர் பின்புறம்) இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல செக்ஸாலஜி மருத்துவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹான் மற்றும் டாக்டர் ஏ. நஸீருல் அமீன் ஆகியோர் மருத்துவ அறிவியல் குறித்த உரை நிகழ்த்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், கீழக்கரை ஹமீது யாசின் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு 050 5196433 / 050 2533712 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications