சூப்பர் செவ்வாய் வாக்கெடுப்பு - ஓபாமாவுக்கு 13, ஹில்லாரிக்கு 8

Subscribe to Oneindia Tamil

Hillary Clinton and Obama
வாஷிங்டன்: சூப்பர் செவ்வாய் எனப்படும் நேற்று, அமெரிக்காவின் 24 மாகாணங்களில் நடந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுக்கான வாக்கெடுப்பில் பாரக் ஓபாமா 13 மாகாணங்களிலும், ஹில்லாரி கிளிண்டன் 8 மாகாணங்களிலும் வென்றனர். குடியரசுக் கட்சி சார்பில் ஜான் மெக்கெய்ன் வென்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் மாகாண வாக்கெடுப்பு நடந்து வருகிறது.

இதில் சூப்பர் செவ்வாய் எனப்படும் நேற்று, 24 மாகாணங்களுக்கு வாக்குப் பதிவு நடந்தது. இதில்13 மாகாணங்களை ஓபாமா வென்றார். இருப்பினும் முக்கியமான கலிபோர்னியா உள்ளிட்ட 8 மாகாணங்களில் ஹில்லாரி வென்றார். இதன் மூலம் இருவருக்கும் இடையிலான போட்டி மேலும் கடுமையாகியுள்ளது.

மறுபக்கம், குடியரசுக்கட்சி சார்பில் ஜான் மெக்கெய்னின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அவர் 9 மாகாணங்களில் வென்றார். இவருக்கும் கலிபோர்னியாவில் வெற்றி கிடைத்தது. ரோம்னிக்கு 7 மாகாணங்களும், ஹக்கபீக்கு 5 மாகாணங்களும் கிடைத்தன.

இன்று அதிகாலை நிலவரப்படி கட்சிப் பிரதிநிதிகளில் ஹில்லாரிக்கு 760 பேரும், ஓபாமாவுக்கு 692 வாக்குகளும் கிடைத்தன. 2025 வாக்குகளைப் பெறுபவர்கள்தான் வேட்பாளராக வெற்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெக்கெய்னுக்கு 570 வாக்குகளும், ரோம்னிக்கு 251 வாக்குகளும், ஹக்கபீக்கு 175 வாக்குகளும் கிடைத்தன. 1191 வாக்குகள் கிடைத்தால் வேட்பாளராக வெற்றி பெற முடியும்.

ஓபாமாவுக்கு அலபாமா, அலாஸ்கா, கொலராடோ, கனக்டிகட், டெலவாரே, ஜார்ஜியா, இடாஹோ, கான்சாஸ், மின்னசோட்டா, மிசெளரி, வடக்கு டகோடா, உடா, இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்களில் வெற்றி கிடைத்தது.

ஹில்லாரிக்கு அரிசோனா, ஆர்கன்சாஸ், கலிபோர்னியா,மாசசூசட்ஸ், நியூஜெர்சி, ஓக்லஹாமா, டென்னஸி, நியூயார்க் ஆகிய மாகாணங்களில் வெற்றி கிடைத்தது.

கருப்பர் இனத்தவரிடையே ஓபாமாவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. முன்பை விட கூடியுள்ளதும் தெரிய வந்துள்ளது. அதேபோல வெள்ளையர்களிடமும் அவருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. அதேசமயம், பெண்கள் மற்றும் ஹிஸ்பானிக் சமூகத்தினரிடம் ஹில்லாரிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஆசியர்களிடமும் அவருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.

மெக்கெய்னுக்கு அரிசோனா, கலிபோர்னியா, கனக்டிகட், டெலவாரே, இல்லினாய்ஸ், மிசெளரி, நியூ ஜெர்சி, நியூயார்க், ஓக்லஹாமா ஆகிய மாகாணங்களில் வெற்றி கிடைத்தது.

ஹக்கபீக்கு அலபமா, ஆர்கன்சாஸ், ஜார்ஜியா, டென்னஸி, மேற்கு விர்ஜீனியாவில் வெற்றி கிடைத்தது.

ரோம்னிக்கு அலாஸ்கா, கொலராடோ, மின்னசோட்டா, மோன்டனா, வடக்கு டகோடா, மாசசூசட்ஸ் ஆகிய மாகாணங்களில் வெற்றி கிடைத்தது.

இப்போதைய நிலையில் குடியரசுக் கட்சியில் மெக்கெய்ன் முன்னிலையில் உள்ளார். அதேசமயம், ஜனநாயகக் கட்சியில்தான் பெரும் இழுபறியாக உள்ளது. ஹில்லாரியின் கை ஓங்கியிருப்பது போலத் தெரிந்தாலும் ஓபாமாவும் கடும் நெருக்கடியைக் கொடுத்து வருகிறார். எனவே மீதமுள்ள மாகாணங்களில் அதிக அளவிலான கட்சிப் பிரதிநிதிகளின் வாக்குகளை யார் பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+