காவல் நிலையத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை: இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

நெல்லை மாவட்டம், மானூர் அருகே உள்ள மாவடியை சேர்ந்த பாவநாசம்-கோயிலம்மாள் தம்பதியின் மகள் சுதந்திர கொடி. கணவரால் கைவிடப்பட்ட கோயிலம்மாள் தனது மகளுடன் கட்டட வேலைக்கு சென்று வருகிறார்.
கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 20ம்தேதியன்று மானூர் காவல் நிலையததில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த விஜயகுமார், ஏட்டு சுப்பையா ஆகியோர் கோயிலம்மாளை ஒரு வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் அவரை லாக்காப்பில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தனர். மேலும் அவரை நிர்வணமாக்கி தொடை, தொப்புள் இடுப்பு பகுதியில் லத்தியால் குத்தி, ஷூ காலாலும் மிதித்துள்ளனர்.
அதன்பின்னர் கோயிலம்மாளை புளியங்கொட்டாரத்தை சேர்ந்த அண்ணாத்துரை, பள்ளமடையை சேர்ந்த குணசேகரன் ஆகியோர் காவல் நிலையத்திற்கு வந்து மீட்டுச் சென்றனர்.
போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த கோயிலம்மாள் பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோயிலம்மாளை காவல் நிலையத்தில் போலீசார் மிருகத்தனமாக தாக்கியது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இைத விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு சுப்பையா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் மானூர் காவல்நிலையத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த வழக்கு நெல்லை குற்றவியல் 5வது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கோயிலம்மாள் நீதிமன்றத்தில் ஆஜாராகி வாக்குமுலம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,
கடந்த 2005ம் ஆண்டு எஸ்பி அலுவலகம் கட்டப்பட்டபோது நான் அங்கு சித்தாள் வேலை பார்த்து வந்தேன். அப்போது மானூர் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த விஜயகுமார் என்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றார். நான் அவரை கண்டித்ததால் என் மீது அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
என் மீது பொய் வழக்கு ஜோடிக்கும் நோக்கத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, என்னை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்து ஆபாச வார்த்தைகளால் திட்டினார். பகல் முழுவதும் லாக்காப்பில் அடைத்து வைத்து உணவு எதுவும் கொடுக்காமல் அடித்து உதைத்தார். இதில் எனக்கு தோள்பட்டை, இடுப்பு, உள்ளங்கை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் எனது உறவினர்கள் என்னை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பெண் என்றும் பாராமல் லாக்கப்பில் வைத்து சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு சுப்பையா ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சர்ச்சைக்குள்ளாகியுள்ள விஜயகுமார் தற்போது பாளையங்கோட்டை தாலூகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications