முதல்வர் கருணாநிதி 10ம் தேதி டெல்லி பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக திட்டங்களுக்கு தேவையான நிதியைப் பெற திட்டக் கமிஷனின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி வரும் 10ம் தேதி டெல்லி செல்கிறார்.
நடப்பாண்டிற்கான பட்ஜெட் 29ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. முன்னதாக 11வது ஐந்தாண்டு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்து இறுதிக் கட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழக திட்டங்களுக்கு உரிய நிதியைப் பெற மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் கருணாநிதி பிப்ரவரி 10ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி செல்கிறார்.
11ம் தேதி அவர் அலுவாலியாவை சந்திக்கிறார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் லாலு பிரசாத் யாதவ், அர்ஜூன் சிங் ஆகியோரையும் கருணாநிதி சந்திக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications