நேபாளத்திலிருந்து கடத்தி வந்து சென்னையில் சிறுநீரகம் திருட்டு: 12 பேர் கைது
சென்னை: நேபாளத்தில் இருந்து ஆட்களை கடத்தி வந்து சென்னையில் சிறுநீரகங்களை திருடிய 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் நடந்த மிகப் பெரிய சிறுநீரக மோசடி குறித்த தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சென்னை டாக்டர் பழனி ஜி.ரவிச்சந்திரன் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
இந்த பரபரப்பு சற்றே அடங்கிய நிலையில் டெல்லி அருகே குர்கானில் மிகப் பெரிய அளவு நடந்த சிறுநீரக மோசடி குறித்த தகவல்கள் வெளியாகி நாட்டையே உலுக்கியுள்ளது.
மும்பை மற்றும் டெல்லி அருகே நடந்த மோசடியில் சென்னையை சேர்ந்த டாக்டர்களுக்கும், பிரபல மருத்துவமனைகளுக்கும் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேபாளத்தில் இருந்து மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் ஆசை வார்த்தைக் கூறி, சிறுநீரகங்களை மோசடியாக திருடிய 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பலுக்கு தலைவராக செயல்பட்டு வந்த தீபக் லாமா என்பவர் தலைமறைவாகி விட்டார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நேபாளத்தில் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஏழை மக்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களில் பெரும்பாலனவர்களை சென்னைக்கு அழைத்து வந்து பிரபல மருத்துவமனைகளில் வைத்து சிறுநீரகம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த மோசடிக்கு சென்னையில் உள்ள டாக்டர்களும், மருத்துவமனைகளும் உடந்தையாக இருப்பது தெரிய வந்துள்ளதால் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணை நடத்த நேபாள போலீசார் சென்னைக்கு வருவார்கள் எனத் தெரிகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications