ரயில் பயணிகளுக்கு உதவும் 99625 00500
சென்னை: ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது பயணிகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உடனே உதவிக்கு அழைக்க புதிய டெலிபோன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாநில அரசின் ரயில்வே பாதுகாப்புப் படை, தெற்கு ரயில்வே, வோடோபோன் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளன. இதற்காக 9962500500 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாடு அறை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், உடனே இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் சொன்னால் உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்து, அந்த ரயிலில் பயணம் செய்யும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், கார்ட் மற்றும் அடுத்த ரயில் நிலையத்தின் அதிகாரிகளுக்கு தகவல் தரப்படும்.
இதன் மூலம் அடுத்த சில நிமிடங்களில் பயணிக்கு ரயில்வே போலீசாரின் உதவி கிடைக்கும். இந்த வசதி 65 எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் சென்னை மின்சார ரயில்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிமுகமான இந்த சேவை பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து ரயில்வே ஐ.ஜி.மாகாளி கூறியதாவது,
இதுவரை ரயில் பயணிகளுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக 37 அழைப்புகளும், மருத்துவ உதவி கேட்டு 14 அழைப்புகளும், திருட்டு தொடர்பாக 16 அழைப்புகளும் வந்துள்ளன.
தனியாக பயணம் செய்த பெண்ணை ஈவ்டீசிங் செய்வதாக புகார் வந்ததை அடுத்து ஒரு வாலிபரை கைது செய்துள்ளோம். இந்த வசதி செய்யப்பட்ட பிறகு உதவி தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக உதவி செய்வதுடன் உரிய பாதுகாப்பும் வழங்க முடிகிறது என்றார்.
சமீபத்தில் ஓடும் ரயிலில் ஒரு பயணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுவிட, இந்த எண்ணை தொடர்பு கொண்டார் சக பயணி. அடுத்த ஸ்டேசனில் ஆம்புலன்ஸை தயார் நிலையில் வைத்து அவரை காப்பாற்றியுள்ளனர் இந்த கண்ட்ரோல் ரூம் பிரிவினர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications