போடியில் சிறுத்தை நடமாட்டத்தால் கடும் பீதி

Subscribe to Oneindia Tamil

தேனி: போடியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் அப் பகுதியில் பெரும் பீதி நிலவுகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள போடி நகரம், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. போடி அருகேயுள்ள மலைப்பகுதிகளான போடிமெட்டு, குரங்கணி மலை, மரக்காமலை, முந்தல், முத்துக்கோம்பை ஆகிய பகுதிகளில் சிறுத்தைகள் உள்ளன.

இந் நிலையில் போடி-தேனி சாலையில் சாலைக் காளிம்மன் கோவில் அருகே சில நாட்களாக சிறுத்தைகள் நடமாட ஆரம்பித்துள்ளன. சிறுத்தையை பார்த்ததாக அந்த பகுதி வழியாக செல்லும் லாரி, பஸ் டிரைவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத் துறையினர் இந்தப் பகுதிக்கு வந்து ஆய்வு நடத்தி அங்கு பதிவாகியிருந்த சிறுத்தையின் கால் தடங்களை ரசாயனப்பொடி தூவி பதிவு செய்து கொண்டனர்.

சிறுத்தைகளின் நடமாட்டத்தால் இப் பகுதியில் பெரும் பீதி நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+