பயணிகளை பாதி வழியில் இறக்கிவிட்ட பாரமவுன்ட் ஏர்வேஸ்
சென்னை: திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த பாஜக மூத்தத் தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்ட அனைத்து பயணிகளையும் சென்னையிலேயே இறக்கிவிட்டு பாரமவுன்ட் ஏர்வேஸ் நிறுவனம் தவிக்கவிட்டது.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வழியாக ஹைதராபாத்திற்கு செல்லும் பாரமவுன்ட் ஏர்வேஸ் நேற்றிரவு 8 மணிக்கு சென்னை வந்தது. சென்னையில் இறங்க வேண்டிய பயணிகள் இறங்கியவுடன் பயணம் தொடரும் என வெங்கைய நாயுடு உட்பட அனைத்து பயணிகளும் அமர்ந்திருந்தனர்.
திடீரென்று விமான ஊழியர்கள் அனைவரையும் கீழே இறங்குமாறு கூறினர்.
என்னவென்று விசாரித்ததில், விமானிக்கு பணி நேரம் முடிந்து விட்டதால் இந்த விமானம் ஹைதராபாத் செல்லாது என தெரிவிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் கடும் ஆத்திரம் அடைந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் விமான நிறுவனத்தின் மற்றொரு அதிகாரி கூறுகையில், போதுமான பயணிகள் இல்லாததால் விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்றார்.
விமான நிறுவன ஊழியர்களின் அலட்சியமான பதிலுக்கு வெங்கைய நாயுடு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதன் பின்னர் வெங்கைய நாயுடு உட்பட ஹைதராபாத் செல்லவேண்டிய அனைவரும் வேறொரு விமானம் மூலம் இரவு 9 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications