மீண்டும் தமிழுக்கு வரும் ஜீ டிவி!

ஏற்கனவே 'பாரதி' என்ற பெயரில் ஜி டிவி தமிழ் சேனல் உலகில் காலடி எடுத்து வைத்தது. ஆனால் அது வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் ஜீ தமிழ் என்ற பெயரில் மீண்டும் களம் இறங்குகிறறு ஜீ.
இன்னும் ஆறு மாதத்தில் ஜீ தமிழ் தனது ஒளிபரப்பைத் தொடங்கும் என ஜீ நிறுவனத்தின் தெற்குப் பகுதிக்கான தலைமை செயல் அதிகாரி ராம்பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ் தவிர மலையாளத்திலும் புதிய சானல் தொடங்குகிறோம்.
ஏற்கனவே பாரதி டிவி என்ற பெயரில் தமிழ் சேனலை தொடங்கினோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அது தொடங்கப்பட்டது. ஆனால் அது பல்வேறு காரணங்களால் தோல்வி அடைந்தது.
அப்போது தொழில்நுட்ப ரீதியாகவும், கன்டென்ட் ரீதியாகவும் மிகவும் பின் தங்கியிருந்தோம். இப்போது புத்தம் புதிய டீமுடன் களம் இறங்குகிறோம். இம்முறை பெரும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்ைக உள்ளது.
ஜீ தமிழ் சானலின் வர்த்தகப் பிரிவு தலைவராக வி.சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். மலையாள சேனலுக்கான தலைவரைத் தேர்வு செய்யவுள்ளோம் என்றார் அவர்.
மேலும் சன் டிவி, டாடா, டிஷ் ஆகியவை போல ஜீ டிவியும் தனது சானல்களை டிடிஎச் மூலம் விநியோகிக்கவுள்ளது.
தற்போது இந்தியாவில் 20 தமிழ் சானல்கள் உள்ளன. அதில் 13 சானல்கள் பொழுதுபோக்கு சானல்கள், ஐந்து இசை சானல்கள், 2 செய்தி சானல்கள். விரைவில் கலைஞர் டிவி 24 மணி நேர செய்தி சானலை தொடங்கவுள்ளது.
இந்த வரிசையில் ஜி டிவியும் சேருகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications